0

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் – Spanish Cheese Omelette Recipe in Tamil – Awesome Cuisine

Share
  • March 28, 2024

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான காலை டிஃபன் ரெசிபியும் கூட.

உலகம் முழுவதும் முட்டையைக் கொண்டு பல்வேறு விதமான உணவுகளை மக்கள் செய்து சுவைக்கின்றனர். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான முறையில் முட்டை மற்றும் உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Spanish Cheese Omelette

Spanish Cheese Omelette

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக ஸ்கூலில் இருந்து நம் பிள்ளைகள் வீடு திரும்பும் போது அவர்களுக்கு ஒரு சத்தான மற்றும் நிறைவான ஒரு உணவை நாம் செய்து கொடுப்பதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. அந்த சவால்களுக்கு இந்த ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் ஒரு அற்புதமான விடை யாக இருக்கும். இவை வெறும் சத்தான மற்றும் நிறைவான உணவாக மட்டுமின்றி மிகுந்த சுவையாகவும் இருக்கும். உங்கள் பிள்ளைகள் இதை கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், குடை மிளகாய், மற்றும் பச்சை மிளகாய் நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டை, மற்றும் பசலை கீரையுடன் சேர்ந்து அதன் நடுவே நாம் வைக்கும் சீஸ் மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனுடன் நன்கு வெந்து அட்டகாசமாக இருக்கும். இந்த ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை ஒரு முறை நம் சுவை அரும்புகள் சுவைத்து விட்டால் இதை மீண்டும் மீண்டும் சுவைத்துக் கொண்டே இருக்க தோன்றும்.

சில குறிப்புகள்:

முட்டைகளை pan யில் ஊத்துவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக உடைத்து பிரஷ்ஷாக கலக்கவும்.

உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது அது ஒட்டாமல் இருப்பதற்கு மூன்றில் இருந்து நான்கு நிமிடத்திற்க்கு ஒருமுறை அதை நன்கு கிளறி விடவும்.

இவ் உணவின் வரலாறு:

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் ஸ்பானிஷ் இல் ‘tortilla de patatas’ என்று அழைக்கப்படுகிறது. ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் உதயமானதற்கு இரண்டு பிரபல கதைகளை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் Carlist போரின்போது Carlist படைகளை வழி நடத்திய தளபதி Tomás de Zumalacárregui யல் Carlist படைகளின் ஆரோக்கியம், நேரம், மற்றும் உணவு பற்றாக்குறையை மனதில் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட உணவாக சொல்லப்படுகிறது. மற்றொரு கதை என்னவென்றால் ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீசியர்கள் இடையே Montes Claros போரின்போது சுமார் 6000 ஸ்பானிஷ் படை வீரர்களை போரின் தோல்விக்கு பிறகு போர்ச்சுகீசியர்கள் கைதிகளாக சுமார் மூன்று ஆண்டுகள் வைத்திருந்த போது அந்தப் படை வீரர்களால் உருளைக்கிழங்கு மற்றும் முட்டை சேர்த்து ஒரு உணவு செய்யப்பட்டதாகவும் பிற்காலத்தில் அதுவே ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் ஆக மாறியதாகவும் கூறப்படுகிறது.

See also  Is It Okay to Eat Expired Cereal?

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 35 லிருந்து 40 நிமிடம் எடுக்கும்.

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை சுமார் இரண்டில் இருந்து மூன்று நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இருப்பினும் இதை செய்து முடித்தவுடன் சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான்.

இதை ஒற்றிய உணவுகள்:

  • பிரெஞ்சு ஆம்லெட்
  • டொமேட்டோ ஆம்லெட்
  • மஷ்ரூம் ஆம்லெட்
  • மசாலா ஆம்லெட்
  • பிரட் ஆம்லெட்
  • ஸ்பினச் ஆம்லெட்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் செய்ய நாம் பயன்படுத்தும் முட்டையில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் D மற்றும் B6 உள்ளது. இவை உடம்பிற்க்கு மிகவும் தேவையான புரத சத்தை அளிப்பது மட்டுமின்றி மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் பசலை கீரையில் புரத சத்து, நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் A, C, மற்றும் K உள்ளது. இவை நம் இதயம், கண், மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் குடை மிளகாயில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

நாம் இதில் சேர்க்கும் சீஸ்ஸில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மற்றும் விட்டமின் D உள்ளது.

Spanish Cheese Omelette
See also  On a very special FGFB...

Prep Time20 minutes

Cook Time20 minutes

Total Time40 minutes

Course: Breakfast

Cuisine: Spanish

தேவையான பொருட்கள்

  • 6 முட்டை
  • 3 உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கை பசலை கீரை
  • 2 tsp மிளகு தூள்
  • தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு சீஸ்
  • தேவையான அளவு ஆலிவ் ஆயில்

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கு, வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பசலை கீரை, மிளகு தூள், மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன்னை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 1 tsp அளவு ஆலிவ் ஆயில் ஊற்றி அதை சுட வைக்கவும்.

  • ஆயில் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்யை போட்டு அதை சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும்.

  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய்யை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

  • பின்பு அதில் 1 tsp அளவு உப்பு மற்றும் 1 tsp அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பசலை கீரை, 1 tsp அளவு உப்பு மற்றும் 1 tsp அளவு மிளகு தூள் சேர்த்து அதை நன்கு கலக்கி விடவும்.

  • 25 நிமிடத்திற்க்குப் பிறகு ஸ்டவ்வை அணைத்துவிட்டு இந்த கலவையை நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டையில் சேர்த்து அதை நன்கு கலக்கி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.

  • அடுத்து ஒரு pan ஐ குறைந்த சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 1 tsp அளவு ஆலிவ் ஆயில் ஊற்றி அதை சுட வைக்கவும்.

  • ஆயில் சுட்ட பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இந்த கலவையில் பாதியை ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு pan முழுவதும் பரப்பி விடவும்.

  • இப்பொழுது அந்த முட்டை கலவையின் மேலே சீஸ்ஸை துருவி விட்டு பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்ப்ரிங் ஆனியன்னை தூவி விடவும்.

  • பின்பு அதன் மேலே மீதமுள்ள முட்டை கலவைகளையும் சீஸ்ஸே தெரியாதவாறு நன்கு கவர் செய்து ஊற்றி அதை சுமார் மூன்றில் இருந்து நான்கு நிமிடம் வரை வேக விடவும்.

  • நான்கு நிமிடத்திற்க்கு பிறகு pan னை விட சற்று சிறிதாக இருக்கும் தட்டை எடுத்து அதில் எண்ணெய் தேய்த்து அந்த முட்டையின் மேலே கவுத்தி பின்பு pan னை கவுத்தி முட்டையை தட்டுக்கு மாற்றவும்.

  • இப்பொழுது pan னை மீண்டும் அடுப்பில் வைத்து அந்த தட்டில் இருக்கும் முட்டையை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அந்த pan னில் சறுக்கி விட்டு ஒரு கரண்டியின் மூலம் அதை மெதுவாக அழுத்தி விடவும்.

  • பின்பு அதன் ஓரங்களை ஒரு கரண்டி மூலம் உள்ளே அழுத்தி அதை ஷேப் செய்து சுமார் நான்கில் இருந்து ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு உங்கள் அற்புதமான ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

See also  9 Best Tweets from Your Favorite Food Chains | #HackTheMenu

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை செய்வதற்கு நாம் ஆலிவ் ஆயிலை தான் பயன்படுத்த வேண்டுமா?

இல்லை. உங்களிடம் ஆலிவ் ஆயில் இல்லை என்றால் நாம் வழக்கமாக பயன்படுத்தும் நல்லெண்ணெய் அல்லது ரீஃபைண்டு ஆயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டில் சேர்க்கும் பசலை கீரைக்கு பதிலாக நாம் வேறு ஏதேனும் கீரையை பயன்படுத்திக் கொள்ளலாமா?

தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஸ்பானிஷ் சமையல் முறையில் பசலை கீரையை தான் பயன்படுத்துவார்கள்.

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை தொட்டு உண்ண உகந்த சைடிஷ்கள் என்னென்ன?

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட் தனியாக உண்பதற்க்கே அட்டகாசமாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கட்டாயம் சைடிஷ் வேண்டும் என்றால் மயோனைஸ் அல்லது புதினா சட்னியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்பானிஷ் சீஸ் ஆம்லெட்டை இன்னும் ஸ்பைசி ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்யை சேர்த்துக் கொள்ளலாம்.

#ஸபனஷ #சஸ #ஆமலட #Spanish #Cheese #Omelette #Recipe #Tamil #Awesome #Cuisine

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com