0

மசாலா பூரி – Masala Puri Recipe in Tamil

Share
  • July 23, 2024

மசாலா பூரி மிகவும் அசத்தலான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். இதை குறைந்த நேரத்திலேயே மிக எளிதாக செய்து விடலாம். இதை செய்ய அதிக பொருட்களும் தேவைப்படாது.

மசாலா பூரி என்கின்ற பெயரை படித்த உடனே இதை இன்று சுவைக்க வேண்டும் என்று எண்ணம் வருகிறது தானே? கவலைப்படாதீர்கள் அப்படி எண்ணுபவர்கள் நீங்கள் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் பல கோடி பேர் உங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான மசாலா பூரியின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Masala Puri

Masala Puri

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

மசாலா பூரி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு மாலை நேர உணவு. இதை நாம் எப்பொழுதெல்லாம் சுவைக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்பொழுதெல்லாம் நேராக கடைக்கு சென்று தான் இதை வாங்கி சுவைத்து மகிழ்ந்திருப்போம். ஆனால் இதை நாம் வெகு எளிதில் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே செய்துவிடலாம். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

மசாலா பூரி செய்ய முதலில் நாம் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை வதக்கி அதை நன்கு பேஸ்ட் ஆக்கிக் கொள்வோம். பின்னர் இந்த பேஸ்ட்டுடன் நாம் வேகவைத்து மசித்து சேர்க்கும் பட்டாணி உருளைக்கிழங்கு கலவை சேர்த்து நன்கு வேக வைப்போம். இந்த பட்டாணி மசாலாவுடன் நாம் சேர்க்கும் பூரி, ஓமப் பொடி, இதற்கென்று ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட புளி சட்னி, மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சேர்ந்து இவை நமக்கு ஒரு அற்புதமான உணவு உண்ணும் அனுபவத்தை ஏற்படுத்தும்.

இவ் உணவின் வரலாறு:

நம்மில் பல பேர் மசாலா பூரி வட இந்தியாவை சார்ந்த ஒரு மாலை நேர உணவாகத்தான் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அது முற்றிலும் தவறு. மசாலா பூரி இந்தியாவை சார்ந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் உதயமானதாக பல வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்ததால் தற்போது இந்திய துணை கண்டம் முழுவதும் இவை பிரபலமடைந்திருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

மசாலா பூரி செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 40 லிருந்து 45 நிமிடம் எடுக்கும்.

மசாலா பூரியை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

மசாலா பூரியை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது. இருப்பினும் இதை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம். ஆனால் அதனின் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது.

See also  REVIEW: Jack in the Box Cinnamon Sugar Churro French Toast Sticks - The Impulsive Buy

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

மசாலா பூரி செய்ய நாம் சேர்க்கும் பட்டாணியில் புரத சத்து, மேங்கனீஸ், நார் சத்து, இரும்பு சத்து, விட்டமின் K, C, மற்றும் A உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, செரிமான அமைப்பை சீர் செய்ய, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் சேர்க்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார் சத்து, கால்சியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்க்கு உதவுகிறது.

Masala Puri
See also  Review: Jack Link's - Fritos Chili Cheese Beef Jerky

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

மசாலா பூரியில் நாம் வேற ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

மசாலா பூரி வழக்கமாக இப்படித்தான் செய்யப்படுகிறது. இது இவ்வாறு உண்ணவே மிக சுவையாக இருக்கும். இருப்பினும் நீங்கள் ஏதேனும் காய்கறிகளை உபயோகிக்க வேண்டும் என்று எண்ணினால் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மசாலா பூரியை இன்னும் காரமாக செய்வது எப்படி?

நீங்கள் காரத்தை விரும்புபவர் என்றால் நீங்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்களது காரத்திற்கேற்ப அரை அல்லது ஒரு மேஜை கரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

#மசல #பர #Masala #Puri #Recipe #Tamil

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com